a K Vijay Anandh review
அதிக விரசம் இல்லாத ஒரு நேர்மையான வயது வந்தோருக்கான நகைச்சுவை படம்.
அடல்ட் காமெடி, நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு அட்டகாசமான பொழுதுபோக்கை வழங்கிய இயக்குனர் ராஜசேகர் ஜிக்கு முதலில் ஒரு பெரிய நன்றி.
போதையும் இரத்தமும் சதையும் கலந்து சகதி ஆகி ரசிகர்களின் கால்களை பிடித்து இழுத்துக் கொண்டு இருக்கும், திரைப்படங்களுக்கு மத்தியில் அடல்ட் காமெடி என்றாலும் அழகான காதல் மற்றும் இன்றைய தலைமுறைக்கு உரிய வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள்ளும் மேட்டருடன் கலகலப்பான படமாக வெளியாகி இருக்கிறது ஸ்வீட்டி நாட்டி கிரேசி .
த்ரிகுண் , சிவா என்கிற கதாபாத்திர பயிருடன் வரும் நாயகனுக்கு அவரது பெயருக்கேற்றார் போலவே மூன்று ஜோடிகள். ஒன்று அவர் காதலித்து கரம் பிடிக்கும் ஜோடி, மற்ற இரண்டும் விபத்தில் கசமுசா ஆகிவிட்ட ஜோடிகள். நல்ல வேலையாக ராதா கதாபாத்திரத்தை கசமுசா செய்ய விடாமல் காப்பாற்றியதிலிருந்து அந்த பாத்திரத்திற்கு ஒரு கண்ணியம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இனியா,கதாபாத்திரத்தை டியூஷன் மிஸ் என்று காட்டி இருப்பதன் மூலப் ஆபாசங்கள் இன்றி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை ரசிக்க முடிகிறது.
த்ரிகுண், தெலுங்கு நாயகன் உடல் மொழிகளில் இவரைப் பார்த்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அளவிற்கு இன்று தலைமுறை நிலையில் ஒரு உதாரண நடிகராக வலம் வந்திருக்கிறார். துறுதுறுப்பான இவரது நடிப்பும் டைமிங் இல் இவர் பேசும் வசனங்களும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றன.
அவரது ஜோடி அனிதாவாக, ஸ்ரீ ஜீத்தா கோஷ் உம், நாயகனுக்கு ஈடு கொடுத்து, சிறப்பாக நடித்திருக்கிறார். முதலாம் ஆண்டு மாணவியாக கல்லூரிக்கு நுழைந்து, சீனியர் மாணவன் நாயகனின் மனதிற்குள் நுழைவது வரை கொள்ளை அழகு. அவனது முந்தைய அனுபவங்களை போர்வைக்குள் கேட்டு ரியாக்ஷன் செய்வது அதைவிட அழகு.
இனியா, ஒரு தேர்ந்த நடிகை என்பதை இந்த படத்தில் மூலம் நிரூபித்திருக்கிறார். கர்ணம் தப்பினாலும் மரணம் என்று சொல்வது போல லேசாக பிசகி இருந்தாலும் மிகவும் ஆபாசமான ஒரு கதாபாத்திரமாக ஆகி இருக்கக்கூடும். அந்த கதாபாத்திரையும் ரசிக்கும் அளவிற்கு அளவோடு செய்திருக்கிறார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சுந்தரா டிராவல்ஸ் ராதா, அவரும் அருமையாக நடித்திருக்கிறார்.
நாயகியின் அப்பாவாக வரும் தம்பி ராமையா, அக்கா மாப்பிள்ளையாக வரும் சத்யன் இருவரது காம்பினேஷன், மிகவும் புதுமையாகவும் அதே நேரம் கலகலப்பாகவும் இருக்கிறது. அதிலும் தம்பிராமையா பேசும் ஜிப்ரி மொழி வசனங்கள் அட்டகாசம். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமலும் போட்டி போட்டுக் கொண்டும் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.
தெலுங்கு நடிகர் ஆலி, அவரும், தம்பி ராமையா விட்டு வேலைக்காரியின் கணவராக ஒரு சில காட்சிகளை வந்தாலும் சிரிக்க வைத்திருக்கிறார்.
ரவி மரியா விஜய் டிவி தனசேகர் மற்றும் வினோத் என்று ஹாஸ்டல் பட்டாளத்துக்கு நாயகன் கதை சொல்வதாக படம் விரிகிறது. ரவி மரியா உள்ளிட்ட குழுவினருக்கு கிளுகிளுப்பு ஏறுவது போலவே படம் பார்ப்பவர்களுக்கும் ஏறுகிறது.
ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா மற்றும் ராதா மூன்று பேரின் வாந்திக்கும் அவர்கள் முழுகாமல் இருப்பது தான் காரணம் என்று மருத்துவர் மதன் பாபு சொல்ல பத்து மாதம் காத்திருங்கள் என்று சொல்லி படம் முடிகிறது, மாமியாரின் பாத்திரத்தை முற்றிலும் டேமேஜ் செய்து விடமாட்டார் இயக்குனர் ராஜசேகர் ஜி என்று நம்புவோம்.
திருமணத்திற்கு முன், முன்பின் தெரியாதவர்களுடன் வைத்துக் கொள்ளும் உடலுறவு, எதிர்காலத்தில் உறவு சிக்கலை ஏற்படுத்தலாம் என்கிற ஒரு விழிப்புணர்ச்சியையும் இந்த படம் ஏற்படுத்தாமல் இல்லை.
புரட்சி புண்ணாக்கு சமூக சீர்திருத்தம் என்று பொய்யான படங்கள் எடுப்பதற்கு பதில் இதுபோல நேர்மையான அடல்ட் காமெடி படங்கள் எடுத்து விடலாம்.
ஸ்வீட்டி நாட்டி கிரேசி , பெயருக்கார் போல் முக்கனிகளில் சுவை!














