a K Vijay Anandh review
மானசா வாரணாசி. என்ன ஒரு பெயர்!! பெயருக்கேற்றார் போலயே அவ்வளவு அழகு, மித்ரா கதாபாத்திரம் படத்தின் நாயகனை கட்டிப்போட்டது போலவே, ரசிகர்களையும் கட்டிப் போடப்போவது நிச்சயம்.
சிவாவாக நடித்திருக்கும் சந்தோஷ் சோபன், நல்ல ஒரு பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம், வசீகரம். சொந்தமாக தொழில் தொடங்க ஆசைப்பட்டு கிட்டத்தட்ட பைக் டாக்சி ஓட்டிக் கொண்டிருக்கும் நாம் அன்றாடம் பார்க்கும் ஒரு இளைஞன்.
நாயகிக்கு கம்பெனியில் தேர்வானாலும் அப்பாயின்மென்ட் ஆர்டர் இன்னும் கிடைக்கவில்லை, நாயகனுக்கோ முதல் ஆர்டர் இன்னும் கிடைக்கவில்லை.
இருவரும் சந்தித்துக் கொண்ட பிறகு எல்லாமே மாறிப்போகிறது. நாயகனின் வாழ்க்கை ராக்கெட் வேகத்தில் உயர, நாயகியோ யாருக்கும் தெரியாமல் தன்னுடைய முடிவுரையை எழுதிக் கொண்டிருக்கிறாள்.
ஏன் ? எப்படி ? எதற்கு ? என்பதை மிகவும் உணர்ச்சி மயமான திரைக்கதையில் சொல்லி அழ வைத்து இருக்கிறார்கள்.
மானசா வாரணாசி. மற்றும் சந்தோஷ் சோபன் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
நாயகனின் அண்ணனாக வரும் டாக்டர் தீரஜ் மற்றும் அவரது மனைவியாக வரும் அஞ்சலி நாயர் இருவரும் மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். வலி என்பது பெண்ணுக்குத்தான் அதை பங்கு போட்டுக் கொள்ள எத்தனை ஆண்கள் முன் வருகிறார்கள் என்று அஞ்சலி நாயர் சொல்வது, நாயகனின் கண்களைத் திறக்க, அவளால் கிடைத்த வாழ்க்கையை அவளுக்காகவே உதறி தள்ளிவிட்டு அவரது இறுதி மூச்சு வரை குழந்தையை பார்த்துக் கொள்வது போல பார்த்துக் கொள்கிறார்.
தொழில்நுட்ப ரீதியாக, தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவில் சென்னை மிகவும் அழகாக தெரிகிறது. பெரும்பாலான படங்கள் சென்னையில் எடுக்கப்படுபவை தான், ஆனாலும் சென்னையின் மிகவும் பரிச்சயமான இடங்கள் திரையில் காட்டப்படும் பொழுது, நாம் அங்கு இருப்பது போல ஒரு உணர்வை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் தனி சிறப்பாக சொல்லலாம்.
ஆதித்யா ரவீந்திரனின் இசை அருமை.
Couples Friendly ஆக இருந்துவிட்டால் இந்த சமூகம் நன்றாக இருக்கும் என்பதை கவிதையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர்.
கப்பிள் பிரண்ட்லி. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் கப்பிள்ஸ்கள்!