a K Vijay Anandh review
ன் முதல் ர் வரை, 13 வருடத்தில்.
2013 இல் நடிக்க ஆரம்பித்தாலும், 2016 இல் வெளியான அழகு குட்டி செல்லம் படத்தில் கென் ஒரு சிறப்பான குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டான். அப்படியே தனுஷ், வெற்றிமாறன் என்று மிகச்சிறந்த திரை ஆளுமைகளுடன் பயணித்து, இன்று ஒரு இயக்குநராக கென் கருணாஸ் மாறியிருக்கிறா”ர்”.
கர்ணம் தப்பினாலும் மரணம் என்பது மாதிரியான வழக்கமான நண்பர்கள், காதல் என்று பள்ளி வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைதான், ஆனால், திரைக்கதை அமைத்த விதத்திலும், பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை அந்தந்த பாத்திரத்தில் நடிக்க வைத்த விதத்திலும், ஒளிப்பதிவாளர் விக்கி, கலை இயக்குனர் ராமு தங்கராஜ் என்று எல்லோரையும் மிகச்சரியாக பயன்படுத்திய விதத்திலும், குறிப்பாக முட்டை கலக்கி இல்லையென்றால், டிபன் இல்லை என்று சொல்வது போல, இவர் இல்லையென்றால் இப்படி ஒரு கொண்டாட்டம் இல்லை, எனும் அளவிற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமாரை பயன்படுத்தி கொண்ட விதத்திலும் கென் கருணாஸ் ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு அத்துடன் ஒரு சின்ன மெசேஜ் என்று அட்டகாசமான படமாக யூத்தை கொடுத்திருக்கிறார். போதை, வன்முறை என்று யூத்தை கெடுத்துக்கொண்டிருக்கும் படங்கள் மத்தியில், “ காதலுக்கு நோ சொல்லு, அதாவது படிக்கும் போது” என்கிற ஒருவரிக்கதையாக , இரண்டு படமாக கொடுத்திருக்கிறார்.
ஆம், முதல்பாதியில் கென் தேடிப்போய் காதலிப்பவர், தானாக வலையில் விழுபவர் என்று விறுவிறுப்பாக பயணிக்கும் கதை, நோ சொல்வதுடன் முடிந்து விடுகிறது, அதாவது நோ சொல்ல முடியாமல் போவதுடன் முடிந்து விடுகிறது.
அப்புறம் லைட்டா ஊகிக்கும் விஷயம் தான், ஒரே வகுப்பில் படிக்கும் அந்த சிறை நாயகி, எப்படியும் கென் கருணாஸை சிறைப்படுத்தாமல் இருப்பாரா ? இரண்டாவது பாதி, முதல்பாதியில் ஏற்பட்ட அவமானத்தை துடைத்துப்போட்டுவிட்டு சிறை நாயகியுடன் மட்டுமே பயணித்து, சிறைக்குள் அடைந்துவிடாமல் விடுதலை பெறுவதுடன் நிறைவடைகிறது.
பார்க்கும் பெண்களையெல்லாம் காதலிக்கிறார் கென் என்றாலும் , ஒரு துளி கூட ஆபாசம் இல்லை. வகுப்பை விட்டு வெளியே அனுப்பப்படும் மீனாட்சி தினேஷை வெளியில் வரும் பெண் ஆசிரியர் முட்டிபோடச்சொல்வார். பக்கத்து வகுப்பில் இருந்து கென் மற்றும் நண்பர்களும் வெளியேற்றப்பட்டிருப்பார்கள். “ மேடம் பசங்க முன்னாடியா..? “ ஆமா பசங்க முன்னாடி தான்..” என்று ஒரு கேப் விட்டு, “ அப்பத்தான் புத்தி வரும், உனக்கு “ என்று ஒன்றை டிரை பண்ணியிருக்கலாம். தவிர்த்து விட்ட கென் கருணாஸுக்கு பாராட்டுகள்.
95% காட்சிகளில் கென் கருணாஸ் தோன்றுகிறார், இவர் எப்போ கேமராவுக்கு பின்னாடி வந்து டைரக்ட் பண்ணினார் என்கிற வியப்பு மேலிடுகிறது. கேமராவிற்கு முன்னிருந்தும் முழுப்படத்தையும் டைரக்ட் செய்யலாம் என்று ஒரு பாடம் நடத்தியிருக்கிறார்.
ஒரு நடிகராக, ஸ்டேண்ட் அண்ட் டெலிவரி என்று இல்லாமல், அட்டகாசமான உடல்மொழியுடன் சிறப்பாக நடித்திருக்கும் கென் கருணாஸ், ஒவ்வொரு நடிகர்களையும் அவர்களின் மேக்சிமம் வெளிவருமாறு நடிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குனராக.
அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ் மற்றும் காதலித்து ஏமாற்றும் பிரியான்ஷி யாதவ் என்று மூவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, கென் நண்பர்கள் குழுவில் டி எஸ் ஆர் மகனாக வரும் ஒரு நண்பன் இருப்பது போல், பெண்கள் பக்கம் ஒரு மாணவி, அவரது வில்லத்தனங்கள் ரசிக்க வைத்திருக்கின்றன. குறிப்பாக அவர் வில்லத்தனமாக பேசும் இடங்களில், ஒரு திகில் படத்திற்கு பேசுவது போல வசனம் பேசுவது வித்தியாசமான முயற்சி.
அபிசன் தேவராசா, கென் கருணாஸின் நண்பர்கள் பட்டாளத்தில் இவரும் ஒருவர், கவனிக்க வைத்திருக்கிறார், தனது வித்தியாசமான நடிப்பால்.
பசங்களைப் பொருத்தவரை, ஒருத்தன் காதல் வயப்பட்டுவிட்டால் போதும், அத்தனை நண்பர்களும் காதல் வயப்பட்டது போல அவர்களது வாழ்க்கையை நாயகனின் காதலுக்காகவே அர்ப்பணித்து விடுவார்கள். வருஷம் 16 ல் கார்த்திக்கின் நண்பர்களும் இதயத்தில் வரும் முரளியின் நண்பர்களும் ஆரம்பித்து வைத்தது அப்படி ஒரு பீலிங் கொடுக்கிறது, அந்த பீலிங்சை முழுமையாக இந்தப்படம் உணர வைத்திருக்கிறது. ஆம், ஒரு பாடலில் அந்தப்பள்ளியில் படிக்கும் அத்தனை மாணவர்களும் கென் கருணாஸுடன் சேர்ந்து ஆடுகிறார்கள்.
தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு கென் கருணாஸின் பெற்றோர்களாக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
பள்ளி முதல்வராக வரும், நளினியும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது பார்வையில் இப்படத்தின் கதையை ஒரே வரியில் சொல்வதானால், 2014 வரை தறுதலையாக இருக்கும் ஒரு இந்திய தமிழ் மாணவன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐ ஏ எஸ் படிக்க வேண்டும் என்று மாறும் அளவிற்கு உயர்கிறான் என்று சொல்லலாம்.
யூத், கோடை கொண்டாட்டம்!