a K Vijay Anandh review
முதல் காட்சியிலேயே கதாநாயகன் சிவா பறையடித்துக் கொண்டிருக்கிறான்.
இரண்டாவது காட்சியில் கதாநாயகி திவ்யா வீடு, அறநிலையத்துறை அதிகாரியான அவரது தந்தை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை சம்பந்தமாக குடும்பத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
மூன்றாவது காட்சியில், இருவரும் கல்லூரியில் சந்தித்துக் கொள்கிறார்கள்.
அப்படி என்றால்..? அதேதான், ரசிகர்கள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய கதை தான்.
ஒரு இயக்குனராக, ஆர் ஜே பி யின் தேர்ந்த கைவண்ணம், படம் முழுவதும் பளிச்சிடுகிறது. கதாபாத்திரங்கள் மிகவும் அளவோடு பேசுகிறார்கள், குறிப்பாக நாயகனும் நாயகியும் . பெரும்பாலும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தியே காட்சிகள் நகர்கின்றன அல்லது பல இடங்களில் மௌனம் அழகாக இருக்கிறது.
கோயில்கள் கூடாது என்பது அல்ல அவை கொள்ளைக்காரர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது, என்று பழம்பெரும் வசனகர்த்தா மு கருணாநிதி எழுதிய வசனம் மிகவும் பிரபலமானது. பகுத்தறிவு வசனம் என்று பெயர் பெற்றது. அதை தூக்கி சாப்பிடும் அளவிற்கு, ஆர் ஜே பி இந்த படத்தில் ஒரு வசனம் எழுதி இருக்கிறார்.
நாயகி கேட்பார், உனக்கு சாமி மீது நம்பிக்கை இல்லையா ? என்று, சாமி மீது நம்பிக்கை இருக்கிறது ஆனால் சாமி கோயிலில் தான் இருக்கும் என்று நம்பிக்கை இல்லை, என்று சொல்வார் நாயகன்.
உண்மையில், ஒரு தத்துவ ஞானி சொல்லக்கூடிய ஆன்மீகம் கலந்த பகுத்தறிவு வசனம்!!
கல்லூரியில் இவர்கள் காதலை நாயகியின் தந்தை பார்த்து விடுகிறார். அங்கிருந்து அமைதியாக புறப்பட்டு வீட்டிற்கு செல்லும் அவருடன் பயமும் சாத்திய துணிச்சலும் நிறைந்த நாயகி அமைதியாக பயணிப்பது மிகச்சிறந்த ஒரு காட்சி அமைப்பு.
நாயகி கேத்தியும் , நாயகன் ஆர் ஜே பியும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
நண்பர்களாக நடித்திருக்கும் சபி மற்றும் ஜிவி உம் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
சங்கர் ராமின் பாடல்களுக்கான இசையும் பின்னணி இசையும் அருமை.
இருவருமே இந்துக்கள், பொதுவான சுடுகாடு, பொதுவான கோயில் என்பது தற்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் கொள்கை. சமூகத்தில் இந்த ஏற்றத்தாழ்வும் இல்லை. மாறாக பொருளாதார அடிப்படையிலேயே தான் ஏற்றத்தாழ்வு.
அப்படிப்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் களையப்பட்டு, காதலர்கள் ஒன்று சேர வேண்டும்.
இருவரையும் சமமாக பாவித்து படிப்பதற்கு வாய்ப்பு அளித்து ஒரு கால அவகாசம் கொடுத்து அவர்களது காதலை நிறைவேற்றும் வாய்ப்பை அவர்கள் கைகளிலேயே கொடுத்து விடலாம்.
இருந்தாலும் இந்தப் படத்தில் காட்டப்பட்டிருக்கும் படுகொலை நிஜமாக நடந்தது என்கிறார்கள், இந்தப் படம் வெளியான அதே நாளில் வெளியான கொலைச் சேவலும், இதுபோன்று வெவ்வேறு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட காதலை அடுத்து செய்யப்படும் அரங்கேற்றப்படும் படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான்.
இரண்டு படங்களிலுமே, கதையோட்டப்படி நாயகனை விட உயர்ந்த ஜாதியில் இருக்கும் நாயகி தான் வலிய வந்து காதலை ஆரம்பிப்பதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
அதிலும் உண்மைகளை காட்ட வேண்டும், அப்பொழுதுதான் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ஆணவக் கொலைகளை ஒழிக்க முடியும்!
திவ்யா, RIP! கதாபாத்திரத்திற்கு, படம் வெற்றி அடையட்டும்!