நீளிரா

Rating 4/5

6

a K. Vijay Anandh review

ஒரு தமிழ்க்குடும்பம், விடிந்தால் சித்து குமரேசனுக்கு திருமணம். குடும்பத்தின் மூத்த பெண்மணி கபிலா வேணு தலைமையில் குடும்பத்தினர் , சொந்த பந்தங்கள் சகிதம் நலங்கு நிகழ்ச்சி இனிதாக நடந்தேறுகிறது. புலிகளுக்கு , தூக்குச்சட்டியில் உணவு செல்கிறது. எதிர்பாராத விதமாக , அந்த வீட்டிற்கு வந்துவிடும் இந்திய ராணுவம்.

அப்படின்னா , கதை எங்கே? எப்பொழுது ? நடக்கிறது என்று இந்நேரம் யூகித்திருக்க முடியும் தானே !

ஆம், ழப்போர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் இலங்கையின் வடபகுதியில் 1988 இல் கதை நடக்கின்றது.

அங்கே எதற்கு இந்திய இராணுவம் சென்றது ? அதான் , இந்தப்படத்தில் வரும் , வாரிசு அரசியல்வாதி தான் எதையும் சிந்திக்காமல் செயல்படுவான் .. என்கிற ஒரு வசனம் போன்று வாரிசு அரசியல்வாதி ராஜீவ் காந்தி , அமைதிப்படை என்று இந்திய இராணுவத்தை அனுப்பி , ஈழப்போரை குழப்பியது மட்டுமல்லாமல் , இந்திய இராணுவத்திற்கும் அவப்பெயரை பெற்றுத்தந்த தருணம்.

அந்த பகுதிக்கு மூன்று பிரிவுகளாக வரும் இந்திய இராணுவத்தின் இரண்டு பிரிவுகள் பத்திரமாக திரும்பி விட , நவீன் சந்திரா தலைமையில் வரும் ஒரு குழுவினர் தவறான மேப்பை பின்பற்றி , திருமணம் நடக்கும் இடத்திற்கு தவறுதலாக வந்து சிக்கிக்கொள்ள , மோப்பம் பிடித்துவிட்ட புலிகள் அவர்களை சுத்துப்போட, மணப்பெண் உள்ளிட்ட வீட்டில் இருப்பவர்கள் பெரும் பீதியில் உறைய அந்த இரவு , அனைவருக்கும் நீண்ட இரவாக ஆகிவிடுகிறது.

புலிகளை இந்திய இராணுவம் வேட்டையாடியதா ? புலிகள் இந்திய இராணுவத்தை வேட்டையாடினார்களா ? திருமணம் நடந்ததா ? என்று திரைக்கதையை திக் திக் என்று மனம் அடித்துக்கொள்ளும் வகையில் நீளிரா வை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சோமீதரன்.

சொந்த நாட்டில் , சொந்த வீட்டில் , சொந்த பேத்திக்கு திருமணம் செய்து வைக்க, இந்திய இராணுவத்திடமும் இலங்கை இராணுவத்திடமும் அனுமதி வாங்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் தமிழர்கள் . அது மட்டுமல்ல , 1948 வரை இந்தியாவோடு இருந்த இலங்கை , அன்றைய காலகட்டத்தில் இரண்டாம் உலகப்போரில் இந்திய இராணுவத்தில் இணைந்து பணியாற்றிய இலங்கை தமிழர் என்று பல ஆச்சிரியமா தகவல்கள்.

புலிகளாக நடித்தவர்கள் மற்றும் இந்திய இராணுவத்தினராக நடித்தவர்கள் என்று அனைவருமே மிகவும் யதார்த்தமாக நடித்திருந்தார்கள்.

குறிப்பாக குடும்பத்தின் மூத்த பெண்மணியாக வரும்பிலா வேணுவின் நடிப்பு பிரமாதம் .

பொழுது விடிகிறது , தனது காதலிக்காக , தாக்குதல் எதுவும் இன்றி திரும்பிசெல்லும் புலித்தலைவன் , பத்திரமாக செல்லும் இந்தியா இராணுவம் !

திருமணம் எப்படி நடக்கிறது என்பதை அறியும் போது , மனது மேலும் கனக்கிறது.

நீளிரா, ஈழத்தமிழர்களின் கண்ணீர் டைரி !