மீசையை முறுக்கு 2

Rating 3.5

8

a K Vijay Anandh review

ஹிப் ஹாப் ஆதிக்கு, இது தான் தெரியும்., அதாவது அடிமட்டத்திலிருந்து ஒருவன் முன்னேறுவது எப்படி..? முன்னேறவேண்டியதன் அவசியம் என்ன ? என்பது குறித்து ஒரு மோடிவேஷனல் படம் எடுக்க தான் தெரியும். அது  நல்லதுதானே!  அது இன்றைய தேதியில் மிகவும் அவசியமானது தானே!

அப்படி, முதக் தலைமுறை தோற்று, இரண்டாம் தலைமுறை பின்வாங்கி, மூன்றாம் தலைமுறை வெற்றிகொடி கட்டுவது தான் மீசையை முறுக்கு 2 படம்/

இசை என்றாலே அது கர்நாடக இசைதான் என்று இருந்த காலகட்டத்தில் கானா பாடல்களையும் அதே மேடையில் அரங்கேற்றுங்கள், கானா பாடல்களுக்கும் அதே மேடையில் ஒரு ஓரமாக இடம் கொடுங்கள் என்று முதல் தலைமுறை ஹிப்ஹாப் ஆதி போராடுகிறார்.

அடுத்த தலைமுறை ஹிப்ஹாப் ஆதியோ ஒரு படி மேலே சென்று, கர்நாடக இசையும் பரதநாட்டியமும் தெரிந்த பெண் தன்னை தேடி வந்து காதலிக்கும் அளவிற்கு கானா பாடல்களில் , கல்லூரி தாண்டி பல மேடைகளில் கொடிகட்டிப்பறக்கிறார்.

மூன்றாம் தலமுறை ஆதி, அவர்கள் இருவரையும் முன்னுதாரணமாகக் கொண்டு அவர்களை முந்தி கானா இசையை கானா ராப் இசையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் இசைக்கலைஞனாக ஜெயிக்கிறான்.

மூன்று ஹிப்ஹாப் ஆதிகள், Chaithra J Achar,  Ramya Ranganathan, Ketika Sharma, என்று மூன்று ஹீரோயின்கள் அந்தந்த காலகட்டங்களுக்கு ஏற்ப இளமை துள்ளும் இசை என்று அட்டக்காசப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஹிப்ஹாப் ஆதி.

ஒவ்வொரு தலைமுறையை விட அடுத்த தலைமுறை கொஞ்சம் வளரும் என்பது இயற்கை, உடல் சம்பந்தப்பட்ட வளர்ச்சி மட்டுமல்ல, ஸ்டேட்டஸ் சம்பந்தப்பட்ட வளர்ச்சியிலும். இதிலும், ராயபுரம் மீனவ குடியிருப்பிலேயே செட்டிலாகும் முதல் தலைமுறை ஹிஹாப் ஆதியாக கருணாஸ், அரசாங்க வேலை என்று அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் இரண்டாம் தலைமுறை ஹிஹாப் ஆதியாக பாபா பாஸ்கர், கானா இசையை சர்வதேசத்திற்கு எடுத்துச்செல்லும் மூன்றாம் தலைமுறை ஹிப்ஹாப் ஆதியாக அவரே என்று மூன்று தலைமுறைகளை கொண்டு வந்து அசத்தியிருக்கிறார்.

அப்பா வழி  தாத்தா கருணாஸ் போலவே  அம்மா வழி தாத்தாவாக நாசரின் இளமைப்பருவ தேர்வும் அட்டகாசம்.

மூன்று ஹீரோயின்களுமே ரசிகர்களையும் ஆடவைக்கிறார்கள். ஹர்ஷத் கான், யோகிபாபு  கூட்டணி  வழக்கம்போல கலகலப்பாக கதையை நகர்த்த உதவியிருக்கிறார்கள்.

இந்தப்படத்தின் தயாரிப்பாளராக சுந்தர் சியும் சம்பந்தப்பட்டிருப்பதால் ஒரு சில ஒப்பீடுகளை வெளிப்படையாக பேசலாம், குறிப்பிடலாம்.

சில படங்களில் ஒளிந்திருக்கும் குறியீடுகளை டிகோட் செய்து ஆளாளுக்கு கருத்து சொல்வது இன்றைய டிரெண்ட். அந்தவகையில், நான் புரிந்து கொண்டதை இங்கே பகிர்ந்திருக்கிறேன்.. இந்துமத பக்தியை வளர்க்க, சாமிபடங்கள் எடுக்கலாம், மூக்குத்தி அம்மன் 2 போன்று  இறைவனின் மகிமைகளை காட்டும் படங்கள் எடுக்கலாம். ஆனால்,  பெரும்பாலான எண்ணிக்கையில் இருக்கும் எளிய இந்துக்களை இந்துக்களாகவே தக்க வைக்க,  அவர்களின்  இசை மூலம் அவர்களுக்கு இந்து மத பக்தியை ஊட்டுவது அவசியம். கர்நாடக இசை பெரும்பாலும் இந்து பக்தி இசையாகவே இருக்கிறது.  இந்தப்படத்தில் வரும் நாயகர்களும் அந்த மேடையில் கானா இசைக்கும் இடம் கொடுங்கள் என்பதாகத்தான் போராடுகிறார்க்ள். அப்படிப்பட்ட கர்நாடக இசையிலேயே கிருத்துவ மத பாடல்கள் ரிகார்டிங் செய்யப்பட்டு பலரது வீடுகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.  இந்து மத பக்தி கானா பாடல்கள் என்று யுடியுபில் தேடினால், கிருத்துவ கானா பாடல்களே கொட்டி கிடக்கிறது. கிருத்துவ மதமாற்றங்கள் அதிகம் நடைபெறுவது, கானா பாடல்கள் பிரபலமாக இருக்கும் இடங்களில் தான் என்பதை  கவனத்தில் கொள்ளவேண்டும். கர்நாடக இசை, பக்தி இசையாக இருப்பதால் தானோ என்னவோ அது நிலைத்து நிற்கிறது. கானா பாடல்களுக்கு அங்கீகாரம் தேவை என்பது மட்டுமல்ல அதுவும் நிலைத்து நிற்க அத்துடன் பக்தி, பெரும்பான்மை மக்களுக்கான பக்தி கலக்க வேண்டியதும் அவசியம்!

அப்படி இருக்கும் போது எளிய மனிதர்களின் இசையான கானா இசையிலும் இந்து மத பக்தி பாடல்கள் அதிகளவில் வரவேண்டியதும் அவற்றிற்கு கர்நாடக இசை மேடைகளில் மட்டுமல்ல, கோயில்களில்  இறைவனின் சன்னிதானங்களிலும் இடம் கொடுக்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயம்.