பத்தா

Rating 3.5/5

18

a K Vijay Anandh review

ஏழு கடல் ஏழு மலை , மனிதர்கள் தாண்டி அனைத்து உயிரினங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டியது அன்பு என்று வலியுறுத்தும் படம் என்றால், யாருக்கும் கொடுக்கவே கொடுக்கக்கூடாத ஒன்றை பற்றி சொல்லும் படமாக பத்தாவை இயக்கியிருக்கிறார் பாலாஜி தரணிதரன்.

அது என்ன கொடுக்கக்கூடாத ஒன்று..? பயம்! ஒரு தனி மனிதனின் பயம் அவனையும் அவன் சார்ந்த குடும்பத்தையும் பலவீனப்படுத்தி விடும். அப்படி பேரைக்கேட்டாலே அத்தனை பேருக்கும் பயம் வரும் அளவிற்கு  அந்த ஏரியாவில் கள்ளச்சாராயம் காய்ச்சி மாஸாக வாழ்ந்து வரும் பத்தா, விஜய்சேதுபதிக்கே ஒருவன் பயத்தை கண்ணில் காட்டுகிறான், அதன் பிறகு என்ன ஆகிறது என்பது தான் பத்தா படத்தின் அட்டகாசமான அதே சமயம் மிகவும் எளிமையான திரைக்கதை.

ரெளடித்தனம் காட்டி நடிக்க பலர் இருக்கிறார்கள். ஆனால், அதன் பிறகு தொற்றிக்கொள்ளும் பயத்தை இயல்பாக வெளிப்படுத்த, தன்னைக்காப்பாற்றிய சிறுவனுடன் இயல்பாக பழகிவிட இவர் ஒருவரால் மட்டும் தான் முடியும், விஜய்சேதுபதி. மிகவும் யதார்த்தமாக வழக்கம் போல அட்டகாசமாக நடித்திருக்கிறார். இவருக்கும் இவரது மனைவியாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸை விட, இவருக்கு வில்லனாக வந்து உறவாக மாறிப்போகும் சிறுவன் சாய் பிரிதிவி ராஜுக்கு இடையிலான கெமிஸ்ட்ரி நன்றாகவே இருக்கிறது.

கடைசியில் விஜய்சேதுபதி ஏன் பள்ளிக்கூட பாத்ரூமுக்கு சென்றார் என்கிற சஸ்பென்ஸ் வெளிப்படும் இடத்திலிருந்து கிளைமாக்ஸ் வரை கலகலாப்பாக பயணித்திருக்கிறது.

காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கூடம் போல, கதவு அவ்வளவு ஸ்டராங்! ஒரு பெருஞ்சுவர், அதில் பதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒரு உறுதியான கதவை செய்து மாட்டும் தச்சர் சம்பந்தப்பட்ட காட்சிகளோடு படம் ஆரம்பிக்கும் விதம் அருமை€1

பத்தா படத்தில் சாய் அப்யங்கரின் இசை கொஞ்சம் மாறுபட்டு இனிமையாகவே இருக்கிறது.

பத்தா, உத்திரவாத பொழுதுபோக்கு!