a K Vijay Anandh review
இப்படி ஒரு பக்காவான ரொமாண்டிக் ஆக்ஷன் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு!
ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு, காதல், அட்வெஞ்சர் என்று அழகான லீட் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆர். கார்த்திகேயன்.
அந்த லீட், இடைவேளைக்கு முந்தைய காட்சிகளில் இருந்து ஆரம்பித்து கிளைமாக்ஸ் வரை நடக்கும் திரைக்கதைக்கு நியாயம் கற்பித்தி விடுகிறது.
ஆம்பளன்னு பார்க்காமல் அழவைக்கிறாங்கன்னு ஆரம்பிச்சு, யாரோ ஒருவருடைய புகழ் வெளிச்சத்தில், சாதி ஓட்டுகள் என்று வாங்கி ஜெயித்து எம் எல் ஏ ஆக இருக்கும் ஒருவன் , பதிவியை தவறாக பயன்படுத்தி பொதுமக்களின் நிலங்களை ஆட்டையை போட நினைத்தால் அவனை போடா மயிரு என்று தான் சொல்லவேண்டும். அப்படி ஒரு கொடூர வில்லனாக நடித்திருக்கிறார், கதிர்பாலு, அவரை அதாவது எந்த எம் எல் ஏ கதாபாத்திரத்தை அசோக் செல்வன் போடா மயிரு என்று அழைக்கும் காட்சி பக்கா மாஸ்.
படம் முழுவதும் வரும் வில்லனாக சூர்யா சார் சூர்யா சார் என்று சிரித்துக்கொண்டே அழைத்து வில்லத்தனம் செய்யும் சபுமோன் அப்துசமத், மிரட்டியிருக்கிறார். ஆனாலும் முக்கிய வில்லனாக தமிழ் நடிகர்களை போட்டு மெருகூட்டியிருக்கிறார் இயக்குனர். மிரட்டலான கதிர்பாலுவுக்கு இணையாக மஹா டெல்லி கணேஷ், சபல புத்தி இன்ஸ்பெக்டராக வந்து அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.
ஒரு அழகான இளம், காதல் தம்பதியின் வாழ்க்கை, கனவு எப்படி சீரழிக்கப்படுகிறது, அதிலிருந்து தன்னம்பிக்கையாலும், அதைவிட அதிகமாக ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதலாலும் எப்படி மீண்டு வந்து ஜெயிக்கிறார்கள் என்பதை அற்புதமாக சொல்லியிருக்கிறார்கள்.
ஹோட்டலில் பணிபுரிபவராக அந்த சீருடையில் பிரீத்தி முகுந்தனை பார்ப்பதில் இருந்து ஒவ்வொரு காட்சியிலும் மிகவும் அழகு. அசோக் செல்வனுக்கும் அவருக்கும் இடையில் நடக்கும் ரொமான்ஸ் ஆகட்டும், இடைவேளைக்கு முந்தைய காட்சிகளில் நடக்கும் சண்டையாகட்டும், இருவருமே போட்டிபோட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள்.
கோவிந்த் வசந்தாவின் இசை, கெளதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு என்று படத்திற்கு மிகவும் வலுசேர்த்திருக்கிறார்கள். சண்டைப்பயிற்சியாளருக்கு ஒரு சிறப்பு பாராட்டுகள்!
பிரீத்தி முகுந்தனுக்கு இது இன்னொரு பிளாஸ்ட், அசோக் செல்வனுக்கு ஒரு சாலிடான வெற்றிப்படம்!