a K.Vijay Anandh review
ஸ்ரீகாந்த், சந்தேகமேயில்லாமல் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவரே! முழுப்படத்தையும் அவர் தான் நகர்த்துகிறார். அவருடைய காதல், அவருடைய தோல்வி, அவரது விரக்தி, அவரது கொடூர எண்ணம், அவரது முடிவு என்று அனைத்திலும் அவர் கொடி கட்டிப்பறக்கிறார்.
ஐ டி துறையில் பணியாற்றும் அவருக்கு அந்த ஐடி கம்பெனியே அதுவும் ஒரு காதல் என்கிற சிறு முதலீட்டில் கிடைக்கவிருக்கும் நிலையில் நூலிழையில் பறிபோகிறதென்றால் அதை எப்படி ஜீரணித்து கொள்ள முடியும்..!
அந்த விரக்தி ஒரு சாதாரண மனிதனை எந்த அளவிற்கு இட்டுச்செல்கிறது என்பதே எக்கோ படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.
வித்யா பிரதீப், பூஜா ஜாவேரி ஆகியோர் முறையே கிராமத்து மற்றும் நகரத்து பெண்களாக கதாபாத்திரத்தம்திற்குள் நச்சென்று பொருந்திப்போகிறார்கள். அம்மா பிரவீனா, தாத்தா டெக்லிகணேஷ் கோயில் பூசாரி காளிவெங்கட் என்று கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். அந்த பூனை வேறு அவ்வப்போது பயமுறுத்தியிருக்கிறது. ஆஷிஷ் வித்யார்த்தி, ஒரு பிளாக் மேஜிக் நிவாரண ஆலோசகராக கர்ஜிக்கும் குரலுடன் அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவரே திரைக்கதையின் முடிச்சுகளை அவிழ்த்து சுபமாக முடித்தும் வைக்கிறார்.
சுதர்சனின் எடிட்டிங் மற்றும் நரேன் பாலகுமாரின் இசை மற்றும் கோபிநாத்தின் ஒளிப்பதிவு ஆகியவை எக்கோவிற்கு சிறப்பான முறையில் கைகொடுத்திருக்கின்றன.
தமிழ்த்திரையுலகிற்கு நம்பிக்கை தரும் படைப்பாளியாக நவீன் கணேஷ் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
எக்கோ, ரசிகர்களின் மனதில் எதிரொலிக்கும்!
mysixer rating 4/5