கொலை

Kolai would be a ref film for film making

384

a K.Vijay Anandh review

பாலாஜி கே குமார், நீண்ட நாட்களுக்கு பிறகான ஒரு முழுமையான படைப்பை அதாவது திரைப்பட இயக்கத்திற்கு நீண்ட காலம் உதாரணமாக இருக்கும் அளவிற்கான படைப்பாக கொலை படத்தை இயக்கியிருக்கிறார்.

பிரபல மாடல் மீனாட்சி செளத்ரி கொலை செய்யப்படுகிறார். கிடைக்கின்ற சாட்சிகளை வைத்து கேஸை விரைவில் முடிக்க பார்க்கும் ஜான் ரவி,  இல்லை நான் முழுமையாக புலனாய்வு செய்கிறேன் என்று களமிறங்கும் ரித்திகாசிங், அவருக்கு உதவி செய்யும் மூத்த காவல் துறை பயிற்சியாளர் விஜய் ஆண்டனி, சந்தேக வளையத்திற்குள் இசையமைப்பாளர் சித்தார்த் சங்கர்,  மாடல் போட்டோகிராபர் அர்ஜுன் சிதம்பரம், மாடல் ஏஜெண்ட் முரளி சர்மா மற்றும் கிஷோர் குமார்கள் இவர்களுடன்  நேர்மையான மாடலிங் துறை முதலாளியாக ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனியின் மனைவி மகள், சித்தார்த்த சங்கரின் தங்கை என்று அற்புதமான கதாபாத்திர அணிவகுப்புடன் கொலை திரைக்கதை சுவராஸ்யமாக பயணிக்கிறது.

விஜய் ஆண்டனி, நரைத்த தலையுடன் ஒப்பனை மெனக்கெடல்கள் ஏதுமின்றி  மிகவும் இயல்பான தோற்றத்தில் ஆனால் முற்றிலும் மாறுபட்ட உடல்மொழியுடன் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ரித்திகா சிங், இந்த துறுதுறு நடிகைக்குள் இப்படி ஒரு முதிர்ச்சியான பெர்மார்ரா என்று கேட்கத்தோன்றும் அளவிற்கு பட்டையை கிளப்பியிருக்கிறார்.

சித்தார்த்த சங்கர், அர்ஜுன் சிதம்பரம் , கிஷோர் குமார் என்று இளைஞர்களின் அணிவகுப்பும் தமிழ்த்திரையுலகிற்கு நம்பிக்கை அளிக்கும் நடிகர்களாக வலம் வருவார்கள் என்று நம்பலாம்.

சில மன உணர்வுகள் சில அமானுஷயங்கள் ஆகியவற்றிற்கான  காட்சிப்படுத்துதலில் காட்டும் மெனக்கடல்கள் அற்புதம், அதுவே கொலை ஒரு முழுமையான படைப்பாளிக்கான படம் என்கிற பெயரை வாங்கி கொடுத்திருக்கிறது.

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இன் இசையும் கொலைக்கு பெரிய பலம்.

மீனாட்சி செளத்ரி சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் ரசிக்கும் படியாக இருக்கின்றன. தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் தீபிகா படுகோன் என்றால் அது மிகையாகாது.

கொலை, சீட் நுனி சீட் நுனி என்று சொல்வார்களே அப்படி உட்கார வைக்கும் புலனாய்வு திரில்லர்!

mysixer rating 5/5