டைனோசர்ஸ்

ஆக்சுவலா இது டை நோ சர்ஸ், Die No Sirs

244

a K.Vijay Anandh review

ஒருத்தன் முன்னாடி உட்காரவைக்கவே இன்னொரு ஆள் தேவைப்படுற வெறும் மண்ணு இல்ல, நம்ம டைனோசர்ஸ் நாயகன் எவன் முன்னாடியும் சும்மா கெத்தா ஸ்டைலா கால்மேல் போட்டுட்டு முடிஞ்சா ஒரு சிகரெட்டையும் பத்து வைச்சு அவன் மூஞ்சிலயே ஊதிக்கிட்டு உட்காருகிற மண், அதுவும் ஆற்றல் மண்.

சென்னையென்றாலே அதுவும் வடசென்னையென்றாலே  ரெளடியிசமும் நாடக காதலும் இல்லடா இங்குள்ள இளைஞர்களும் வாழ்க்கையில் தானும் முன்னேறி தன்னை சுற்றி இருப்பவர்களையும் முன்னேற்றி அழகுபார்ப்பவர்கள் டா என்று அருமையான கருத்தை சொல்லும் படமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் MR மாதவன். அப்படி காட்டிக்கொண்டிருப்பவர்களை டிரவுசர் பையன்களாக காட்டி விரலில் வடையை மாட்டிக்கொண்டு சென்னை வடசென்னை என்று பாட வைத்து கலாய்த்திருக்கிறார். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு வசனமும் சமூக அவலங்களை அசால்டாக பேசிச்செல்லும் படியாக மிகவும் இயல்பாக அதேநேரம் வலிமையாக எழுதியிருக்கிறார்.

துரத்திவரும் ரெளடியும் மட்டை பண்ணுகிற தேடிவரும் காதலையும் உதறித்தள்ளுகிற ரியல் ஹீரோவாக அறிமுக நாயகன் உதய் கார்த்தில், ஆற்றல் மண் கதாபாத்திரத்தில் முழு ஆற்றலுடம் நடித்து பெயர் வாங்கிவிடுகிறார். படம் முழுவதும் இவர் தான் இவர் மட்டுமே தான் தெரிகிறார். இன்னொரு பக்கம் இவரது அம்மா, அண்ணன், நண்பர்கள், காதலி, மிகப்பெரிய இரண்டு தாதாக்கள் என்று பல்வேறு கதாபாத்திரங்கள் இருந்தும் இவர் மட்டுமே தெரிகிறார், அந்த அளவிற்கு அட்டகாசமாக நடித்திருக்கிறார் உதய் கார்த்திக்.

இவருக்கு அடுத்து  ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் நடிகர்களாக தனாவாக நடித்த அவரது நண்பன் துரையாக நடித்த மாறா. இருவருக்குள்ளும் இழையோடும் அழகான நட்பும் அவர்களை மையப்படுத்தி நகரும் விறுவிறுப்பான திரைக்கதையும் அழகு.

அக்மார்க் சென்னை படம் , அக்மார்க் மெட்ராஸ் படம் என்று சொல்லத்தக்க ஒரு அற்புதமான படைப்பாக டைனோசர்ஸ் வெளியாகியிருக்கிறது.

இப்படி ஒரு கதை வந்தவுடன் விஜய் முதல் தனுஷ் வரை கால்ஷீட் கேட்டு அலைந்துகொண்டிருக்காமல் முற்றிலும் புதுமுகங்களை வைத்து இப்படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கும் தயாரிப்பாளர் காலக்ஸி பிக்சர்ஸ் சீனிவாஸ் சம்பந்தம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் கொண்டாடப்படும் தயாரிப்பாளர்களுள் ஒருவராக வலம் வருவார்.

ஒரு ஏரியாவை அடக்கி ஆளும் தாதாவிடம் மாட்டிக்கொண்டு சீரழிந்த சென்ற தலைமுறை, சீரழிந்துகொண்டிருக்கும் இன்றைய தலைமுறை ஆகியவற்றை பார்த்து மனம் வெதும்பி அடுத்த தலைமுறையையாவது காப்பாற்ற வேண்டாமா என்று களமிற ங்கும் நாயகர்கள் தான் இன்றைய சூழலில் அத்தியாவசியத்தேவை, அப்படி ஒரு நாயகனை முன்னிறுத்திய இந்தப்படத்தை பார்த்து மகிழுங்கள்.

மைசிக்ஸர்.காம் ரேட்டிங் 4.5/5