ஸ்ட்ரைக்கர்

96

a K Vijay Anandh review

அடிப்படையில் ஒரு கார் மெக்கானிக் ஆகவும் ஆவிகளுடன் பேசும் ஆர்வம் உடையவராகவும் இருக்கிறார் நாயகன் ஜஸ்டின் விஜய். அப்படி ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் ஒரு கல்விச்சாலை நடத்துகிறார் கஸ்தூரி. அப்படி இறந்து போன ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்வது பற்றிய விஷயங்கள் உண்மைதானா என்பது பற்றி ஒரு youtube நிகழ்ச்சிக்காக ஜஸ்டின் விஜய் பேட்டி எடுக்க வருகிறார் வித்யாபிரதீப்.

ஜஸ்டின் விஜய் அவைகளுடன் பேச முயன்று தோற்றுப் போவதை கிண்டல் அடித்து யூடிபில் பதிவேற்றுகிறார். வித்யா பிரதீபின் உண்மையான நோக்கம் தெரியாத ஜஸ்டின் விஜய், சமீபத்தில் விபத்தில் இறந்து போன ஒரு ஆத்மாவை பற்றிய உண்மை அறியும் வேண்டுகோளுக்கிணங்க அந்த வீட்டிற்கு செல்கிறார். அப்படி செல்லும் பொழுது வித்யா பிரதீபையும் அழைத்துச் செல்கிறார்.

அங்கு விபத்தில் இறந்து போன கணவரின் ஆத்மாவுடன் பேச முயற்சிக்கும் பொழுது ஏற்படும் திகிலான அனுபவங்கள் தான், ஸ்ட்ரைக்கர் படத்தின் விறுவிறுப்பான இரண்டாவது பகுதி.

முன்னதாக கார் மெக்கானிக்காக பணியாற்றும் ஹீரோ தான் கண்டுபிடித்த ஒரு பிரேக்கிங் சிஸ்டத்தை ஒரு காரில் பொருத்த, அது சரியாக பொருத்தப்படாத நிலையில் அவருக்கு தெரியாமலேயே அந்த காரின் உரிமையாளருக்கு டெலிவரி செய்யப்பட படத்தின் ஆரம்பக் காட்சியில் ஒரு விபத்து நடக்கிறது.

ஒரு சர்ப்ரைஸ் கேமியோவாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருப்பதும் ஒரு சிறிய சுவராசியத்தை தருகிறது.

அந்த விபத்திற்கு காரணமான தன் கணவனின் இறப்பிற்கு காரணமான நாயகனை அவன் கற்றுக் கொண்ட வித்தை மூலமாகவே தனது கணவரை வரவழைத்து பழிவாங்குவது தான் மிகவும் ஆச்சரிய படுத்தும் கிளைமாக்ஸ்.

பட ஆக்கத்தில் மற்றும் ஒளிப்பதிவு இசை நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் இயக்குனர் எஸ்.ஏ பிரபுவின் இந்த ஸ்ட்ரைக்கர் பெரிய ஸ்கோர் செய்திருக்கும்.

மைசிக்சர் ரேட்டிங் 2.5/5