கெழப்பய

24

a K.Vijay Anandh review

ஒத்தையடி பாதை என்று சொல்லத் தக்க ஒரு பாதை. நிறைமாத கற்பிணியை ஏற்றிக் கொண்டு பழைய கருப்பு நிற மோரிஸ் காரில் நான்கு பேர் பயணிக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் சைக்கிள் ஓட்டிக்கொண்டு ஒரு பெரியவர். என்னதான் ஹாரன் அடித்தாலும் ஒதுங்கி செல்லாமல் சாலையின் குறுக்காகவே சைக்கிளை போட்டுக்கொண்டு அடம் பிடிக்கிறார்.

என்னடா கர்ப்பிணி பெண்ணை ஏற்றி செல்கிறார்கள், இந்தப் பெரியவர் அவர்களுக்கு வழி கொடுக்க மாட்டேன் என்கிறாரே  என்கிற மனநிலை ரசிகர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது.

இந்த சாலையில் நடக்கும் களேபரங்களை அமைதியாக நின்று வேடிக்கை பார்க்கும் இருவர். அவர்களைப் போலவே கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக ரசிகர்களையும் வேடிக்கை பார்க்க வைத்து விடுகிறார்  இயக்குனர் யாழ் குணசேகரன்.

எதற்காக அந்த பெரியவர் அவ்வளவு அடி உதைகளையும் வாங்கிக்கொண்டு அந்த காரின் பின் சக்கரங்களின் காற்றையும் பிடுங்கி விட்டுக்கொண்டு அடம் பிடிக்கிறார் என்று அந்த ஊர் தலையாரி உட்பட, அந்தப் பெரியவரின் மகன் மருமகள் உட்பட அனைவருக்கும் புரியவில்லை.

நடுநடுவே சாலையின் நடுவில் நின்று யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்புகிறார் பெரியவர்.

கிளைமாக்ஸ் இல் நான்கு காவல்துறை அதிகாரிகள் வருகிறார்கள்.

இந்த இடத்தில் நாம் கதையை கணித்து விட முடியும் என்றாலும், அந்த  ஒன்றரை மணி நேரமும் ஒரே இடத்தில் ஒரு பெரியவர் மற்றும் ஒரு நான்கு ஐந்து பேர் ஆகியோரை வைத்துக்கொண்டு கதை சொன்ன விதத்தில் யாழ் குணசேகரன் ஒரு வித்தியாசமான படைப்பிற்கு வித்திட்டு இருக்கிறார்.

முதியவராக நடித்திருக்கும் கதிரேச குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கெழப்பய, வித்தியாசமான முயற்சி.

mysixer rating 3.5/5