a K Vijay Anandh review
இதற்கு முன் விஷால் இரட்டை வேடத்தில் நடித்ததில்லையா என்றால், அவர் நடித்திருக்கும் அத்தனை படங்களிலுமே இரட்டை வேடம் தான். முதல் பாதியில இந்த பூனையும் பால் குடிக்குமா ? எனும் அளவிற்கு அப்பாவியாய் வருவார், இரண்டாம் பாதியில் அவர ஆக்ஷன் அவதாரம் எடுப்பார்.
இந்த படத்தில் அப்பாவித்தனத்திற்கு மகன் மார்க்காகவும் அதிரடி ஆக்ஷனுக்கு அப்பா ஆண்டனியாகவும் இரு வேறு கதாபாத்திரங்களாக இரட்டை வேடம் ஏற்று தனக்குள் இத்தனை நாட்களாக அடக்கி வைத்திருந்த ஒரு அலட்டலான நடிகனை ரசிகர்களுக்காக அவிழ்த்து விட்டிருக்கிறார்.
எந்த அளவிற்கு அலட்டல் என்றால் எஸ் ஜே சூர்யாவையே ஓவர்டேக் செய்யும் அளவிற்கு. ரிட்டு வர்மாவை காதலிக்கும் அப்பாவி மார்க் ஆகவும், பாலியல் தொழிலில் மாட்டிக் கொண்ட அப்பாவி அபிநயாவை அதிரடியாக திருமணம் செய்து கொண்டு வருவதிலாகட்டும், உயிர் நண்பனாக இருந்து தன் உயிரையே எடுக்க வரும் எஸ் ஜே சூர்யாவுடன் மோதுவதாகட்டும் , மகனின் போன் கால் மூலம் 1995 க்கு வந்து அதிரடி காட்டுவதிலாகட்டும் நடிப்பில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் விஷால்.
இன்னொரு அப்பன் மகளாக எங்கே சூர்யா, நடிப்பு அரக்கன் தான்யா…. இந்திய அளவில் ஷாருக்கானுடன் வில்லனாக பட்டையை கிளப்பிவிட்டார் விஜய சேதுபதி. அடுத்து . அமீர்கானுக்கு ஒரு பவர்ஃபுல் வில்லன் தேவைப்பட்டால் இன்றைய தேதியில் எஸ்ஜே சூர்யாவை விட்டால் வேறு ஆள் கிடையாது.
இன்னொரு வில்லனாக சுனில், எஸ்ஜே சூர்யாவிற்கு மச்சினனாகவும் மாமாவாகவும் வரும் ஒய் ஜி மகேந்திரா பிறவி நடிகர்கள் எனும் அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் ஆண்பாதி பெண் பாதி போல ஆண்டிமாமாவாக வரும் ஒய்ஜிஎம் செம்ம.
விஞ்ஞானி செல்வராகவன் வக்கீல நிழல்கள் ரவி என்று அனைவருமே அட்டகாசம்.
1970 மற்றும் 1995 காலகட்ட பாடல்களை பொருத்தமாக வைத்ததுடன் புதிய பாடல்கள மற்றும் பின்னணி இசை என்று பிரமாதப்படுத்திவிட்டார் ஜிவி பிரகாஷ் குமார்.
1970 – 1995 க்கிடையிலான காலகட்டத்தை தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறார் ஆர்ட டைரக்டர் ஆர்கே விஜய் முருஙள். அட Al தொழில் நுட்பத்தால் சில்க் ஸ்மிதாவையே கொண்டு வந்திருக்கிறார்கள்.
கேங்ஸ்டர், பிளாக் ஹியூமர், ஆக்ஷன் அத்துடன் டைம் மிஷின் 1970 – 1995 காலகட்ட நடிகர்களின் கொஞ்சம் தூக்கலான நடிப்பு ஆகியவற்றை சரியாக மிக்ஸ் செய்து அனைத்து வயதினரும் கொண்டாடி மகிழத்தக்க அட்டகாசமான பொழுதுபோக்காக மார்க் ஆண்டனியை கொடுத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
mysixer rating 4.5/5