a K. Vijay Anandh review
தமிழ் தான் மூச்சு, தமிழ் தான் பேச்சு, தமிழ் தான் உயிர் என்று சொல்லிச்சொல்லி தமிழர்களை ஏமாற்றி அரசியல்பிழைப்போரின் பின்னால் தமிழர்களின் உயிருக்கு நிகரான தாய்மொழி இல்லைடா இந்தப்படத்தில் எம் ஜி ஆர் பாண்டியனாக வரும் அமீருக்கு, ஒரு சாந்தினி ஸ்ரீதரன் தமிழ்ச்செல்வியாக இருப்பது போல், தமிழ் தமிழ் என்று தமிழர்களை ஏமாற்றும் ஒவ்வொருத்தனுக்கு பின்னாடியும் ஏதோ ஒரு விஷயம் இருக்கு, அதுக்குத்தான் டா அவய்ங்க அப்படி கூவிக்கூவி அரசியல் செய்றாய்ங்க மற்றபடி தமிழர்களின் தாய்மொழியான தமிழ் மீதெல்லாம் அவய்ங்களுக்கு ஒரு டேஷும் இல்லடா, தமிழ் தமிழ்னு சொல்லி அரசியல்பிழைக்கும் அல்லைக்கைகளிடம் ஜாக்கிரதையாக இருங்கடா என்று துணிச்சலான ஒரு கருத்தை விதைக்கும் படமாக உயிர் தமிழுக்கு வை இயக்கியிருக்கிறார் ஆதம்பாவா.
ரஜினி- கமல் போன்ற மாஸ் நடிகர்களின் படங்களில் வரும் அறிமுகப்பாடலை பாடியிருப்பவர் பெரும்பாலும் எஸ் பி பாலசுப்ரமணியன் தான். அப்படி ஒரு வரம் கிடைத்திருக்கும் கடைசி நடிகர் அமீர் தான். அந்த எம் ஜி ஆர் பாடலும் அதை படமாக்கிய விதமும் அற்புதம்.
இன்று 18 வயது பையன் ஹீரோவாக ஆகமுடிகிறது. ஆனால், அன்று எம் ஜி ஆர் முதல் சத்யராஜ் வரை காலம் கடந்து தான் ஹீரோ ஆனார்கள். அதைப்போல அமீரும் ஹீரோ ஆகியிருக்கிறார். அதன் மூலம், ஸ்கிரிப்ட்டைத் தூக்கிக்கொண்டு ஹீரோக்களை தேடி அலைந்து கொண்டிருக்கும் பல வயதுகடந்த இயக்குநர்களுக்கு ஒரு நம்பிக்கையை விதைத்திருக்கிறார். அவரை ஒரு மாஸ் ஹீரோவாக காட்ட மெனக்கெட்டு பல காட்சிகளையும் வைத்திருக்கிறார் ஆதம் பாவா.
சாந்தினி ஸ்ரீதரன், ஒரு அழகான நடிகை தமிழுக்கு கிடைத்திருக்கிறார் எனும் அளவிற்கு அழகும் திறமையும் சேர்ந்த நடிகையாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
சுடலை மாமாவாக வரும் இமான் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து கொண்டு அமீர் அடிக்கும் லூட்டி ரசிக்க முடிகிறது.
எல்லாவசதிகளையும் கொடுத்த அரசியல் தான் எனக்கு எல்லாமே என்று நேர்மையாக தன் மகளிடம் பேசும் பழக்கடை ராமச்சந்திரன் ஆனந்த்ராஜை ரசிக்க முடிகிறது.
சாதி பார்த்துத்தானேடா ஓட்டுப்போடுறீங்க என்று சொன்னவர்கள், வசதியாக ஜாமாத் மற்றும் திருச்சபைகள் இன்னாருக்குத்தான் ஓட்டுப்போடனும் என்று மக்களை மிரட்டி அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அவலத்தை மறந்து கடந்து போயிருக்கிறார்கள். அப்புறம் அது, ஆன்மீக அரசியல்ல வராதா..? அமீர் மற்றும் ஆதம்பாவா..? அல்லது அங்கெல்லாம் ஆன்மீகம் இல்லை என்கிறீர்களா..?
மற்றபடி, உயிர் தமிழுக்கு ஒரு பொழுதுப்போகிற்கான மெனக்கெடல், அரசியல் விழிப்புணர்ச்சிகள் என்கிற நொறுக்குத்தீனிகளுடன் !