சட்டம் என் கையில்

mysixer rating 4/5

155

பொதுவாக சிவராத்திரிக்கு இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும் என்று விரும்பி சிவ ஆலயங்களில் சென்று அமர்வோம்.முதல்பாதி இரவை கடப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். அதிரடியான அர்த்த ஜாம பூஜைக்குப் பிறகு நாமே நினைத்தாலும் நம்மை தடுக்க முடியாது, அடுத்த நாள் காலை வரை வெற்றிகரமாக விழித்திருந்து சிவனருள் பெறுவோம்.

கிட்டத்தட்ட அதே அனுபவம் தான் சட்டம் என் கையில் படத்திலும், என்னங்கடா இது பொணத்தை டிக்கிக்குள்ள வைச்சுக்கிட்டு ஏற்காடு முழுவதும் தேடிக்கிட்டு இருக்காய்ங்க என்கிற சலிப்பு தட்டாமல் இல்லை. இரண்டாவது பாதியில் அதற்கான முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும் போது பின்னிட்டாய்ங்கடா என்று நம்மளையறியாமல் கொண்டாடி மகிழ்வோம் .

அப்புறம் ஏன் இதற்கு சிவராத்திரியுடன் ஒப்பீடு என்றால் , சட்டம் என் கையில் படமும் ஒரே இரவில் நடக்கும் கதை தான், அதற்காகத்தான்.

பாவல் நவநீதனும் ,  அஜய் ராஜும்  துடிப்பான இளம் காவல்துறை அதிகாரிகளாக வித்தியாசமாக  நடித்திருக்கிறார்கள். பாவா செல்லத்துரை , kpy சதீஷ் , ராம்தாஸ் , வித்யா பிரதீப் உள்ளிட்டவர்கள் தங்கள் பங்கை செவ்வனே வழங்கியிருக்கிறார்கள்.

எந்த ஒரு சாமான்யனும் மாஸ் அவதாரம் எடுக்கலாம் என்பதற்கு , இந்தப்படத்தில் சதீஷ் ஏற்று நடித்திருக்கும், சாதாரண ஒரு மிடில் கிளாஸ் இளைஞன் கதாபாத்திரம் பெரிய உதாரணம் சதீஷ் தனது வழக்கமான , நக்கல் நய்யாண்டி முக பாவனைகளை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக உயிர் கொடுத்திருக்கிறார்.

ஆன்லைன் வகுப்பெடுக்கும் ரித்திகா கதாபாத்திரம் அழகு. அதைவிட அவருக்கும் சதீஷுக்குமான சகோதர உறவு அழகு. கிளைமாக்ஸ் பாடலில் லேபர் வார்டு மற்றும் மார்ச்சுவரி காட்சிகள் மாறி மாறி காட்சிப்படுத்த பட்டிருப்பது தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயம் புது அனுபவத்தை கொடுக்கும். சாச்சி நீங்கள் இயக்குநராக ஜெயித்து விட்டீர்கள்.

சட்டம் என் கையில், ரசிகர்கள் கொடுப்பார்கள் வெற்றியை உங்கள் கையில்.