TRENDING

mysixer rating 3/5

99

a K.Vijay Anandfh review

சமூக வலைத்தளங்களில் தங்களது தனிப்பட்ட என்று ஒன்றுமே இல்லாத அளவிற்கு காலை எழுவதிலிருந்து இரவு தூங்குவது வரை,  பல்விளக்குவது முதல் எதெற்கெடுத்தாலும் பல்லிளிப்பது வரை அனைத்தையும் விடியோ போட்டு டிரெண்ட் ஆகி லட்சங்களில் சம்பாதிக்க ஆரம்பித்து தவணையில் அனைத்தையும் வாங்கிப்போட்டு , வேறு எந்த விதத்திலும் சம்பாதிக்க தெரியாத நிலையில் , வருமானம் அனைத்தும் நின்று போனால் என்ன ஆகும்..?

அப்படிப்பட்ட, சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஒரு தம்பதியை, யாரோ ஒருவன் பிக்பாஸ் விளையாட்டு போன்ற ஒரு செட்டப்புக்குள் சிக்க வைக்கின்றான். அவன் கொடுக்கும் டாஸ்க்குகளில் வென்று 2 கோடிகள் சம்பாதிக்கின்றார்களா என்பதே டிரெண்டிங் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.

கலையரசன் – பிரியாலயா ஆகிய இருவரை மட்டுமே அதுவும் அவர்களது வீட்டிற்குள் வைத்தே பாதிக்கும் மேற்பட்ட காட்சிகளை சுவராஸ்யம் குறையாமல் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் சிவராஜ். கலையரசன் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். பிரியாலயாவின் லேசாக கொங்கு சாயலில் அமைந்த அந்த தமிழ் உச்சரிப்பு வசீகரிக்கின்றது. அவர் பேசி நிறுத்தும் இடங்களில் நாமும் பார்க் ஆகிவிடுவது போன்ற பிரமை.

நடு நடுவெ பெசண்ட் ரவி ஆட்கள் வந்து வசூல் பிரச்சினைகளில் ஈடுபட்டு கதையை விறுவிறுப்பாக்க முயற்சித்தாலும், ஒரு இடத்தில் இதற்கு மேல் என்ன பண்ணப்போறாய்ங்கன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போதே பிரேம் , கதைக்குள் நுழைய அடுத்த 24 மணி நேரமும் ராக்கெட் வேகத்தில் பயணித்து இலக்கை அடைகிறது , டிரெண்டிங்.,., அடைவதும் டிரெண்டிங்.

வியாபாரத்தில் நஷ்டமடைந்து குழந்தையின் உயிருக்காக, நிர்க்கதியாய் வந்து நிற்கும் பிரேம், துளி கண்ணியம் குறையாத மனிதனாக இறுதி நொடிகள் வாழ்ந்து மரணிக்கிறார். அவர் எப்படி அங்கே வந்தார் என்பது, ரசிகர்களுக்கு கூடுதல் விருந்து.

என்ன வருமோ அதில் உழைத்து சம்பாதித்து கூழோ கஞ்சியோ குடித்து வாழ்ந்தால், நிம்மதியாக செத்துப்போகலாம். இது போன்ற போலியான ஒரு பிரபல வாழ்க்கை வாழ்ந்தால், பணம் வரும், ஆனால் வாழ்க்கையில் நிம்மதி பறிபோய்விடும் என்கிற அழகான கருத்தை விதைத்திருக்கிறது, டிரெண்டிங்.