Dark

Rating 3.5/5

48

a K Vijay Anandh review

Evil Dead Burn  என்றொரு ஹாலிவுட் படம். ஜுலை 10 ஆம் தெதி ஹான் வெளியாகிறது என்றாலும், டார்க் படத்திற்கு முன்பாகவெ  பத்திரிகையாளர் காட்சியில் திரையிடப்பட்டது. ஹாரார் படமென்றால் இப்படி எடுக்கவெண்டும், நம்மூரில் என்னதான் முயற்சி செய்தாலும், இப்படி எடுக்கமுடியவில்லையெ என்று ஒரு கணம் நினைத்தேன்.

அன்று மாலையே டார்க் படத்தின் பிரிவியூ, Evil Dead Burn   படம் போல காட்சிக்கு காட்சி இரத்தம் தெறிக்கவில்லை என்றாலும், நச்சுனு நாலு சீனு,  கதை எழுதிய கணேஷ் கே பாபுவும் இயக்கிய கல்யான் கே ஜெகனும் மிரட்டிவிட்டார்கள்.

ஐ ஏ எஸ் மற்றும்  ஐபி எஸ்  பணி உள்ளிட்ட  தேர்வுகளுக்கு பயிற்சி கொடுக்கும் ஒரு நிறுவனம். அங்கே  சிறப்பு அழைப்பாளராக வருகை தரும், காவல் துறை உயரதிகாரி நட்டி என்கிற நடராஜிடம், உங்கள் பணி அனுபவத்தில் நீங்கள்  பயந்த அனுபவம் இருக்கிறதா ? என்று ஒரு கேள்வி, அவரே மிரண்டு போன ஒரு கேஸைப்பற்றி விவரிக்கிறார். அந்த பயம் பார்வையாளர்களுக்கும் தொற்றிக்கொல்கிறது.

காதலனின் துரோகத்தால் தற்கொலை செய்துகொள்ளும் கே பாக்யராஜின் மகள் அர்ச்சனா முருகன், அவர்கள் வீட்டு மாடி போர்ஷனுக்கு வாடகைக்கு வரும், அவறிடம் தவறாக நடக்க முயலும், அத்தனை பேரையும் கொடூரமாக கொலை செய்கிறார்.  விளம்பர டிசைன்கள் செய்யும் அஜய் கார்த்திக், ஒரு நல்லவன் தப்பிக்கிறான்,  தற்கொலை செய்துகொண்ட மகள், தன்னுடன் ஆவியாக வசிக்கிறார் என்பதே தெரியாமல் கே.பாக்யராஜ் செத்துப்போகிறார், அட நிஜமாகவெ படம் வெளியான அதே வாரத்தில் கே பாக்யராஜ், இயர்கையெய்தியிருப்பது மிகவும் வேதனையான விஷயம், அவருக்கு இந்த விமர்சனம் சமர்ப்பணம்.

அர்ச்சனா முருகனிடம் சில்மிஷம் செய்யும் 3 நன்பர்களும் ஒருவருக்கொருவர் கொடூரமாக தாக்கி தங்களுக்குத்தாங்களே தீ வைத்து எரிந்து சாம்பலாகும் காட்சி பயமுறுத்தும் ரகம்.  அதில், ஒருத்தனின் மண்டைக்குள் தோசை தவா சொருக்கப்படும் காட்சி பயங்கரம்.

அர்ச்சனா முருகன் தான் , கொலையாளி  என்பதை நட்டி என்கிற நடராஜ் புலனாய்வு செய்வதோடு படம் நிறைவடைகிறது.  காவல்துறை உயரதிகாரியாக மிடுக்காக வரும் நட்டி நடராஜ், பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளில் உச்சக்கட்ட பயத்துடன் நடித்து அசத்தியிருக்கிறார்.

முன்னரே குறிப்பிட்டது போல பட்ஜெட் இருந்தால், ஹாவிவுட்லாம் நம்மிடம் பாடம் கற்க வரிசை கட்டி நிற்பார்கள்.

டார்க், உறைய வைக்கும் திகில் அனுபவம் !