SIGMA

Rating., Just Appreciating

21

a K Vijay Anandh review  எந்த

ஒரு மாஸ் நடிகராக இருந்து, தேர்தலில் மாஸாக வெர்றிபெற்று தமிழக முதலமைச்சர் ஆகிவிட்ட விஜய், நடித்து அவர் முதலமைச்சர் ஆன பிறகு வெளிவந்த ஜனநாயகன் படத்தை Rating இல் அடக்கிவிட விரும்பாமல், No Rating, Only Celeb-Rating என்று நமது மைசிக்ஸர்.காமில் விமர்சனம் வெளிவந்தது. லிங்க்., https://www.mysixer.com/?p=21140

அதைப்போலவே , இந்த இளம் வய்தில் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் ஜேசன் சஞ்சய் இயக்கி வெளிவந்திருக்கும் இந்த சிக்மா படத்திற்கும் ரேட்டிங் கொடுக்காமல் Appreciating அளவிலான விமர்சனம்.., அதற்கு அவர் முதலமைச்சர் மகன் என்பது காரணம் அல்ல!

லண்டன் , கனடா என்று பிலிம் மேக்கிங் படித்துவிட்டு எந்த விதமான மேற்கத்த்ய கலாச்சார  திணிப்பையும் செய்யாமல், மிகவும் நேர்மையாக இந்திய கலாச்சாரத்திற்கு எற்றவாறு திரைக்கதை அமைத்து இயக்கிய விதத்திற்கு முதல் Appreciation.

சந்தீப் கிஷனின் கதாபாத்திர வடிவமைப்புக்கு இரண்டாவது Appreciation.. ஒரு பொறுப்பான இளைஞனாக, ஏழைக்குழந்தைகளுக்கும் சமூகத்திற்கும் கல்வி அறிவு மற்றும் பொது அறிவு கொடுக்க வேண்டும் என்கிற தாய் ஷீலாவின் கனவை நனவாக்கும் பொருட்டு  , எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தன் தாய் உருவாக்கிய நூலகத்தை விடாமல் நடத்தும் மன உறுதி.   காலத்திற்கேற்ப தன்னை அப்டேட் செய்துகொண்டு, ஒலி நூலகம்  மூலம் நல்ல புத்தகங்களை மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொண்டு செல்லும் பொருட்டு, பெண் குரல் ஒன்றைத்தேட அது ஆர் ஜே சாமாக வரும் ஃபரியா அப்துல்லா மூலம் கிடைக்க அவரது குரலை அவரது அனுமதி இல்லாமலே பயன்படுத்தினாலும் அவருக்கான ராயல்டியை கொடுக்க வெண்டும் என்கிற நேர்மை.  எப்படியாவது கடனை அடைத்து விட்டு நூலத்தை தொடர்ந்து நடத்தவேண்டும் அவ்வளவு தான் அவருக்கு ஆசை.

தொல்பொருட்களை விற்பனை செய்யும் வில்லிமஸின் மகளாக ஒரு நடுத்தரக்குடும்பத்திற்கே உரித்தான  கஷ்ட நஷ்டங்களுடன்  வாழும் நாயகி கதாபாத்திரம், இக்கட்டான சூழலில் காதலனை விட்டு போய்விடாமல்,  அவனது கஷ்டத்திலும் தொடர்ந்து பயணிப்பதாக அமைத்த விதத்திற்கு மூன்றவாது  Appreciation.

சந்தீப் கிஷன் – ஃபரியா அப்துல்லா இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

மையக்கதாபாத்திரங்களான சந்தீப் கிஷன் – ஃபரியா அப்துல்லாவின் காதல் மட்டுமல்ல,  எதிர்மறை கதாபாத்திரங்களாக இருக்கும் Y என்று அழைக்கப்படும் யோக் ஜேப்பி – சாரங்கி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகாலட்சுமி ஆகியோருக்கு இடையிலான காதல் கூட மிகவும் கண்ணியமாக காட்டப்பட்டிருக்கிறது.  காசுக்கு கொலை செய்யும் Y கதாபாத்திரம் கூட கடைசியில் காதலுக்காக மனிதனாக மாறிவிடுகிறது.  நான்காவது Appreciation.

தன்னால் எவ்வளவு பெரிய நடிகர்களிடமும் கால்ஷீட் வாங்க  முடியும் என்கிற நிலையிலும் சந்தீப் கிஷன் – சம்பத் ராஜ் தவிர அத்தனை கபாத்திரங்களுக்கும் , ஷிவ் பண்டிட், அன்பு தாசன்,  கமலேஷ், கிரன் கொண்டா போன்ற அதிகம் பிரபலமில்லாத அல்லது முற்றிலும் புதிய நடிகர்களை நடிக்க வைத்து கதை தான் ஹீரோ என்று தனது முதல் படத்திலேயே நிரூபித்ததற்கு  ஐந்தாவது Appreciation.

மூத்த நடிகர் ராஜேஷ், பல புத்தகங்களை படிப்பவர், உலக சினிமா அனுபவம் உள்ளவர். அவருக்கு மரியாதையான விடைகொடுக்கும் அளவிற்கு, ஒரு அற்புதமான கதாபாத்திரம் கொடுத்த விதத்தில் ஆறாவது Appreciation.

எப்படியாவது தன் கடனை அடைக்கவேண்டும் , பொருளாதார உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் ஒரு சாமான்யன் என்ன செய்வானோ அதையே செய்ய முயல்கிறார் சந்தீப் கிஷன். அங்கிருந்து விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்தேறுகின்றன. நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும் என்பது போல நல்லவனின் செயலும் தீமைகளை அழிக்க உதவும் என்கிற பாணியில், செத்துவிட்டான் என்று நம்பப்படும் கொடூர வில்லன் சம்பத் குமார், கடைசியில் அவனது ஆட்களாலேயே கொல்லப்படுகிறான். சந்தீப் கிஷனால், கொல்லப்படாமல், யோக் ஜேப்பியின் கையில் பிடித்திருக்கும் கத்தியில் விழுந்து சாவது நல்ல திரைகதை உக்தி.

முத்தாய்ப்பாக ஒரு Appreciation., அப்பனுகே பாடம் சொன்ன சுப்பையா என்று கடவுள் முருகனைச் சொல்வார்கள். அதுபோல, இன்றைய தேதியில் தமிழக முதலமைச்சராக இருக்கும் தனது அப்பா சி ஜோசப் விஜய்க்கு ஒரு அருமையான திட்டத்தை இந்தப்படத்தின் மூலம் கொடுத்திருக்கிறார், மகன்  ஜேசன் சஞ்சய். ” ஒலி நூலகம்”  சி ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறைஅமைச்சர்  ராஜ்மோகன் இந்தப்படத்தை பார்த்து ஒலி நூலகம் என்கிற ஐடியாவை எடுத்துக்கொண்டு, ”வெற்றி ஒலி நூலகம்” என்கிற பெயரில் ஒரு மைய நூலகத்தை அமைத்து மாணவர்கள் பிரத்யேக செயலிகள் மூலம் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் பாட நூல்கள் மற்றும் அறிவுசார்ந்த விஷயங்களை செவி வழியில் கேட்டு படித்து பயனடையலாம். அத்துடன், ஆங்கில மீடியத்தில் படித்து தமிழே சரியாகப்பேசத்தெரியாத  தமிழைத்தாய்மொழியாகக்கொண்ட சாமான்யன்கள் முதல் மாண்புமிகுக்கள் வரை தமிழை சரியாக உச்சரிக்கவும் பிழையின்றி பேசவும் வெற்றி ஒலி நூலகம் வாயிலாக முன்னெடுப்புகளை எடுக்கலாம்.

எந்தவிதமான அழுத்தங்களையும் எடுத்துக்கொள்ளாமல், தொடர்ந்து சிறப்பாக உழைத்தால் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாளிகளின் பட்டியலில் இடம்பிடிப்பார்.

சிக்மா, சிறப்பு !