கிட்டி

Rating 2.5/5

11

a K Vijay Anandh review

சில சமூக விரோதிகள் படுகொலை செய்யப்படுகிறார்கள், காவல்துறை விசாரிக்கின்றது.  சம்பந்தமே இல்லாமல் ஒரு அப்பாவி இளைஞன் சம்பந்தப்பட்ட கொலைகளை நான் தான் செய்தேன் என்று சரணடைகிறான். விசாரிக்கும் போது, காவல்துறை சரியாக மோப்பம் பிடித்து ஒரு உளவியல் மருத்துவரிடம் போய் நிற்கின்றது.

மனோசக்தி அடிப்படையிலான படங்கள் ஹாலிவுட்டில் கூட அவ்வளவாக எடுக்கப்படுவதில்லை. கர்ணம் தப்பினால் மரணம் என்கிற அளவில் திரைகதை அமைக்கப்பட்டு, மிகவும் நேர்த்தியாக எடுக்கப்படவேண்டிய கதைக்களங்கள் அவை.

ஒரு பக்கம் விறுவிறுப்பான காவல்துறை அதிகாரியாக யுகன் மிகவும் யதார்த்தமாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

இன்னொரு பக்கம், அப்பாவி இளைஞனாக , உளவியல் மருத்துவரின் அம்பாக இயங்கி அவர் அவனுக்கு உளவியல் ரீதியாக இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் இளைஞனாக அசோக் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். குற்றம் எவ்வாறு நடந்தது என்று விவரிக்கும் காட்சிகளில் உண்மையில் இவர் யாருடனும் சண்டை போட்டிருக்கமாட்டார். ஆனால், சண்டை போட்டதாக சொல்லவேண்டியிருப்பதால்,  சண்டைபோடுவது போல ஆக்டிங் மட்டும் மற்றும் சண்டைபோடுவது என்று இரண்டு தடவைகளாக ஒரே காட்சியில் நடித்திருப்பது பாராட்டுக்குரியது. உயிருடன் இல்லாத கதாநாயகியுடன்  பாடும் டூயட் அட்டகாசம்.

உளவியல் மருத்துவராக ஆர் . அரவிந்த்ராஜ், கதாபாத்திரத்திற்கே உரிய பக்குவம்.

ஒரு விறுவிறுப்பான சைக்காலஜிகல் கிரைம் திரில்லராக இந்தப்படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் நெடுமாறன்.