E 1

Rating 2.5

59

a K Vijay Anandh review

தனது  மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஒரு அபார்ட்மெண்ட்வாசியை அவனுடைய அபார்ட்மெண்டுக்கே சென்று கொன்று எடுத்து வந்து எரிப்பதுதான் மொத்தப்படமும்.

அப்படி வரும் போது வாட்ச்மேன் பார்த்துவிடக்கூடாது என்று திறந்திருக்கும் இன்னொரு பிளாட்டிற்குள் டெட்பாடியோடு நுழையும் நாயகன், அந்த வீட்டு பெண்ணிடம் கண்ணியமாக நடந்துகொள்வதும், அவளது பிறந்த குழந்தையை அவள் பரமாரிக்க எவ்வித இடையூறும் கொடுக்காமல், தான் செய்த கொலைக்கான காரணத்தை விவரிப்பதுமே E 1 திரைப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.

சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்து கொல்லும் கொடூரர்களை தொடர்ந்து எலி மினேட் செய்ய நாயகன் எடுக்கும் சபதத்துடன் படம் நிறைவடைகிறது. E 1 , 2, 3 என்று வரிசையாக படங்கள் வெளிவரலாம்.

சதா நாடார் தனது மனைவி மோனிகாசெலினாவுடன் இணைந்து இந்தப்படத்தை இயக்கி தயாரித்தும் இருக்கிறார். இருவருமே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். அவர்களது , பிறந்த ஒரு சில மாதங்களே ஆன மகன் ஷிவ் நாடாரும் பொருத்தமான கதாபாத்திரத்தில் தோன்றி அசத்தியிருக்கிறார்.

திருட்டுத்தனமாக ஒரு அபார்ட்மெண்டிற்கு சதா நாடார் நுழையும் போது, ஏன் எதற்கு என்று தெரியாமல் இருப்பதும், அதன் பிறகு உண்மை தெரியும் போது வியப்பதுமாக திரைக்கதை அமைந்திருக்கிறது.

படம் முடிந்த நிலையில், பத்திரிகையாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு சளைக்காமல் மிகவும் தெளிவாகவும் உண்மையாகவும் பதில் சொன்ன சதா நாடார் , சாதா நாடார்  அல்ல, ஏதோ சாதிக்க்ப்பிறந்த நாடார்  என்று தெரிகிறது. தென் தமிழ் நாட்டில் இருந்து எத்தனையோ நாடார் சமூகத்து மக்கள் பல்வேறு துறைகளிலும் கோலோச்சி சமூக வளர்ச்சிக்கும் தேச வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில், கொங்கு மண்டலத்திலிருந்து வந்திருக்கும் சதா நாடார், ஒரு தெளிவான இலக்குடன் , சரியான திட்டமிடலுடன் தனது பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்!