பரம்பொருள்

சிலைகடத்தலுக்குள்.ஒரு விழிப்புணர்வு

81

a K.Vijay Anandh review

அமிதாஷை ஒரு மெயின் ஸ்ட்ரீம் ஹீரோ வரிசையில் கொண்டுவந்துவிட்டது இந்த பரம்பொருள். உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் தன் தங்கையை காப்பாற்ற ஒரு சிலை கடத்தல் டீலில் நுழையும் அமிதாஷ்,  மிகவும் இயல்பாக சரத்குமாருடன் பயணித்து பரம்பொருளுக்கு வலுசேர்த்துவிடுகிறார்.

சரத்குமார், ஆரம்ப காலகட்டத்தில் பெரிய பெரிய நாயகிகளுடன் எல்லாம் நடித்திருக்கிறார் சூப்பர் டூப்புகளை கொடுத்தும் இருக்கிறார்.  ஆனால், இந்த வயதில் படத்திற்கு படம் இளம் தலைமுறை நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறார். ஒரு வில்லத்தனமான காவல்துறை அதிகாரி வேடத்தில் மிகவும் தத்ரூபமாக நடித்து அசத்தியிருக்கிறார். 1 லட்சம் என்றாலும் ஆளுக்கு பாதி என்று அமிதா ஷுடன் கறாராக நிற்கும் இடங்களில் அடடே போடவைக்கிறார்.

காஷ்மீரா பர்தேசி, ஒரு ஓவியராக சிற்பவேலைகள் தெரிந்தவராக வந்து குறைவான காட்சிகளில் நடித்து அதைவிட குறைவான வசனங்கள் பேசி நிறைவாக நடித்துவிடுகிறார்.

இவ்வளவு சீரியசாக  தனது வலியை பேசிக்கொண்டே சிரிக்க வைக்க முடியுமா..? பாலாஜி சக்திவேல், அமிதாஷ், சரத்குமார் சம்பந்தப்பட்ட கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிகள் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என்றால் மிகையாகாது.

சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக வரும் கஜராஜா,  கடத்தல் காரர்களாக வரும பஅலகிருஷணன், வின்செண்ட் அசோகன் மற்றும் டி சிவா என்று அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா, இசையை பற்றி தனியாக எதுவும் சொல்லவேண்டுமா..? பாடல்களிலும் பின்னணி இசையிலும் வழக்கம் போல சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.

பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு மற்றும்  நாகூரன் ராமச்சந்திரனின் எடிட்டிஙகும் அருமை. அதிலும்,  மொத்த கதையும் ஏன்..? எதற்கு..? எப்படி..? ஆரம்பிக்கின்றது எப்படி முடிகிறது என்று கிளைமாக்ஸில் ஒரு சில நிமிடக்காட்சிகளில் விவரிப்பது அருமை.

பரம்பொருள் என்கிற பெயருக்கேற்ப, சிலை கடத்தலை மையமாக வைத்து கதையை ஆரம்பித்தாலும் மிகவும் நேர்மறையாக முடித்த திரைக்கதை உத்தியில் இயக்குநர் சி.அரவிந்த் ராஜ் வெற்றிபெற்றிருக்கிறார்.

எதிர்மறைக்குள் ஒரு நேர்மறை, பரம்பொருள்!

mysixer rating 4/5